தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’70 வயதுக்கு மேற்பட்ட சிறைவாசிகளுக்கு பிணை கொடுங்கள்’ - மேதா பட்கர் மனு - மேதா பட்கர்

சிறைச்சாலைகளில் இருக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க அவர்களுக்கு பிணை வழங்குமாறு, உச்ச நீதிமன்றத்தில் சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் மனு தாக்கல் செய்துள்ளார்.

Medha Patekar moves SC seeking release of prisoners aged 70 and above
Medha Patekar moves SC seeking release of prisoners aged 70 and above

By

Published : Jun 20, 2021, 7:33 AM IST

டெல்லி: சிறைச்சாலைகளில் இருக்கும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பிணை வழங்கும்படி சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கரோனா தொற்றிலிருந்து இவர்களைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றத்தை அவர் நாடியுள்ளார். மேலும், பிணை வழங்க முடியாதவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும் எனவும் தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளை அடிப்படையாக வைத்து, இந்த மனுவினை உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ளார். கரோனா தொற்றை எதிர்கொள்ளும் திறன் இந்த வயதுடையர்களுக்கு குறைவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details