தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மறைந்தார் 'மசாலா அரசன்'

டெல்லி: எம்டிஹெச் மசாலா நிறுவனத்தின் உரிமையாளர் தரம்பால் குலாடி மறைவுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Dharampal Gulati
Dharampal Gulati

By

Published : Dec 3, 2020, 10:17 AM IST

இந்திய அளவில் மசாலா நிறுவனங்களில் பிரபலமான எம்டிஹெச் மசாலா நிறுவனத்தின் உரிமையாளர் தரம்பால் குலாடி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 98.

1923ஆம் ஆண்டு பாகிஸ்தானின் சியால்கோட்டில் பிறந்த இவர், தன்னுடைய பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்டுவிட்டு தனது தந்தை மேற்கொண்டு வந்த மசாலா வியாபாரத்தில் இறங்கினார். அதன் பின்னர் சுவையான தரமான மசாலாவை தயாரிப்பது எப்படி என்று ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் கற்றுத்தேர்ந்தார்.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு ரூ.1500 பணத்துடன் இந்தியாவில் குடிபெயர்ந்த இவரின் இன்றைய சொத்து மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடிகளுக்கு மேல் இருக்கும். ஆரம்பக்காலத்தில் தலைநகர் டெல்லியில் சிறிய அளவில் மசாலா கடை ஒன்றை நடத்திவந்தார். தரமான, சுவையான மசாலா தயாரிப்பில் ஈடுபட்டு தொழிலில் படிப்படியாக முன்னேறினார். மக்களிடம் நன்மதிப்பைப் பெற்று தனது மசாலா தொழிலையும் கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்தினார்.

இன்று இந்தியாவின் முன்னணி மசாலா நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ள எம்டிஹெச் மசாலா நிறுவனத்திற்கு 15 தொழிற்சாலைகள் உள்ளன. தரம்பால் குலாடி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக இருந்துவந்தார். இவரின் இந்த திடீர் மறைவு அந்த குழுமத்தின் ஊழியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவரது மறைவையொட்டி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அவர் பலருக்கும் முன்னுதாரணமாக இருந்தார். அவரின் ஆன்மா சாந்தி அடைய நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். டெல்லி துணை முதலமைச்சர் மனோஜ் சிசோடியாவும் தரம்பால் குலாடி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட்

2019ஆம் ஆண்டு தரம்பால் குலாடிக்கு பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'கமகமக்கும் மசாலா டீ வேண்டுமா' - இப்படி செஞ்சு பாருங்க

ABOUT THE AUTHOR

...view details