தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி உள்ளாட்சி இடைத்தேர்தல்: ஆம் ஆத்மி அமோக வெற்றி, அனைத்து இடங்களிலும் பாஜக படுதோல்வி! - ஆம் ஆத்மி டெல்லி தேர்தலில் வெற்றி

டெல்லி மாநகராட்சி வார்டு இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி நான்கு இடங்களை கைப்பற்றிய நிலையில் பாஜக அனைத்து இடங்களிலும் படுதோல்வி அடைந்துள்ளது.

Delhi municipal bypolls
Delhi municipal bypolls

By

Published : Mar 3, 2021, 12:10 PM IST

டெல்லி மாநகராட்சியின் ஐந்து வார்டுகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்.28) நடைபெற்றது. அதற்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில் ஐந்தில் நான்கு இடங்களை கைப்பற்றி ஆளும் ஆம் அத்மி கட்சி அமோக வெற்றிபெற்றது.

கல்யாண்புரி, ரோஹின்-சி, திரிலோக்புரி, ஷாமிலார் பாக் வடக்கு ஆகிய வார்டுகளை ஆம் ஆத்மி கைப்பற்றியது. சௌஹான் பங்கார் வார்டை மட்டும் காங்கிரஸ் கைப்பற்றியது. போட்டியிட்ட ஐந்து வார்டுகளிலும் எதிர்க்கட்சியான பாஜக தோல்வியைச் சந்தித்துள்ளது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் ஆத்மியை வீழ்த்தி பாஜக மாநகராட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பாலியல் வழக்கில் சிக்கிய அமைச்சர்: புகார் அளித்த ஆர்வலர்!

ABOUT THE AUTHOR

...view details