லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் சரோஜினி நகரில் உள்ள டி.எஸ்.மிஸ்ரா மருத்துவக் கல்லூரி மாணவி இன்று (பிப். 17) தற்கொலையால் உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் காலை 8 மணி அளவில், மருத்துவக் கல்லூரியின் விடுதி வளாகத்தில் நடந்துள்ளது.
இதைக்கண்ட சக மாணவிகள் போலீசாருக்கும், அவரது பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பயிடத்துக்கு விரைந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து லக்னோ போலீசார் கூறுகையில், தற்கொலையால் உயிரிழந்த மாணவி ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டார்.
இவர் பிகார் மாநிலத்தை சேர்ந்த மெதல் சிங் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது தந்தை கைலாஷ் ஆசிரியராக உள்ளார். இவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால், விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை கைலாஷ் புகார் அளித்துள்ளார்.