தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மே தினம் அரசு விடுமுறையை ரத்து செய்வதா - ஏ.ஐ.யூ.டி.யூ.சி. கண்டனம்

மே தினம் அரசு விடுமுறையை ரத்து செய்வதாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை எதிர்த்து ஏ.ஐ.யூ.டி.யூ.சி. கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.

may day leave aiutuc condemn
may day leave aiutuc condemn

By

Published : Oct 13, 2021, 10:57 PM IST

புதுச்சேரி: மே தினம் அரசு விடுமுறையை ரத்து செய்வதாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை எதிர்த்து ஏ.ஐ.யூ.டி.யூ.சி. செயலாளர் சிவக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "2022ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை புதுவை அரசு அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதி விடுமுறை அளிக்கவில்லை. புதுவை அரசின் இச்செயலை தொழிற்சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினமாக அறிவிக்கப்பட்டு அன்று நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் புதுவை அரசு 2022ஆம் ஆண்டு விடுமுறை மே தின பட்டியலில் தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதி அன்று விடுமுறை அளிக்காதது தொழிலாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவதற்கு சான்றாகும்.

எனவே, கடந்த ஆண்டுகளை போல 2022ஆம் ஆண்டிலும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தின விடுமுறை அறிவிக்க வேண்டும். இதுகுறித்து ஆளுநர், உள்துறை செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details