இன்று முதல் வீடு தேடி வரும் மளிகைப் பொருள்கள்!
வீடுகளுக்குச் சென்று மளிகைப் பொருள்களை விற்பனை செய்யும் திட்டம், இன்று முதல் அமலுக்கு வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மளிகைப் பொருள்கள் விற்பனை செய்ய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மின்சார ரயில் சேவை அதிகரிப்பு
சென்னையில் இன்று முதல் மின்சார ரயில் சேவை அதிகரிக்கப்பட்டு, கூடுதலாக 57 ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி 151லிருந்து 208ஆக மின்சார ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மின்சார ரயில் சேவை அதிகரிப்பு 12 ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து: இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!
கரோனா பெருந்தொற்று காரணமாக, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய மனு, இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் விசாரணை இன்றைய பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் இன்று (மே.,31), பெட்ரோல் லிட்டருக்கு 95.76ரூபாய், டீசல் லிட்டருக்கு 89.90 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை உலகப் புகையிலை எதிர்ப்பு நாள்
உலகப் புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31ஆம் தேதியன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து, இந்நாளை 1987ஆம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது.
உலகப் புகையிலை எதிர்ப்பு நாள்