தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Rasi Palan: கன்னி ராசிக்காரர்களுக்கு வரவை விட செலவு உயரும்; உங்கள் ராசிக்கு என்ன பலன்? - கன்னி

மே 19ஆம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைக் காணலாம்.

Rasi Palan
ராசி பலன்

By

Published : May 19, 2023, 6:34 AM IST

மேஷம்: இன்று, நீங்கள் ஒருவரின் உள்ளத்தை புண்படுத்த நேரிடலாம். நீங்கள் வலிமைமிக்க நிலையான உறவை, உங்கள் விருப்பப்படி ஏற்படுத்திக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையேயான உறவு வலுவடைய வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்: கடின உழைப்பு இருந்தபோதிலும், உழைப்பிற்கு ஏற்ற வெகுமதி கிடைப்பது கடினம். பிற்பகலில் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். மாலை நேரங்களில் நிம்மதியாகவும், அழகாகவும் நேரத்தை செலவிடுவீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களுடன் அளவளாவுவீர்கள்.

மிதுனம்: உங்களை சுற்றி உள்ளவர்கள் சந்தோஷமாக இருந்த போதிலும், உங்களுக்கான வேலைப்பளு அதிகரிக்கலாம். வியாபார சிக்கல்களைக் கவனமாகக் கையாள வேண்டும். வியாபார ரீதியான பயணத்தை மேற்கொள்ளலாம். தொழிலில் காரிய சித்தி அடைய சிறந்த நாளாக அமையும் வாய்ப்பு உள்ளது.

கடகம்: உங்கள் தலைமையில் செய்யப்படும் பணியில் பதட்டங்கள் ஏற்படும். போட்டியாளர்கள் இருப்பினும் வியாபாரத்தில் சிறந்து விளங்குவீர்கள். உங்களின் முயற்சியால் மகிழ்ச்சி கிடைக்கப் பெறலாம்.

சிம்மம்:உங்கள் மனம் சொல்வதைக் கேட்காமல், சிந்தித்து செயல்படுவதன் மூலம் எல்லா விதமான செயல்களிலும் அபரிதமான வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் வீட்டை புதுப்பித்தல் மற்றும் மாற்றங்கள் செய்ய முயற்சி செய்யலாம். இன்று உங்களுக்கு அனைத்து வகையிலும் ஏற்ற நாளாக அமையக்கூடும்.

கன்னி:நீங்கள் மற்றவர்களின் மனதை புண்படுத்துபவரை அடையாளம் காட்டக் கூடிய நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். வரவை விட செலவு அதிகரிக்கக்கூடும். நீண்டகால திருமணத் தடை நீங்கும். உங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கப் பெற்று உறவுகள் வலுப்படக் கூடும்.

துலாம்: உங்கள் கடின உழைப்பால் வலிமையான ஆளுமையை ஏற்படுத்திக் கொள்வீர்கள். மற்றவர்களின் கவனத்தை உங்கள் பக்கம் ஈர்க்க கூடிய வாய்ப்பு உள்ளது. சில விசேஷ கூட்டத்தில் உங்களுக்கு முக்கியமானவர்களைச் சந்திக்க வாய்ப்பு உள்ளது. காதல் உணர்வு ஏற்படலாம்.

விருச்சிகம்: நிதானமாக செயல்படும் காலம். சரியான முடிவு எடுப்பதற்கு நேரம் எடுத்துக் கொள்வது அவசியம். எந்த ஒரு முடிவையும் நன்கு ஆலோசனை செய்த பிறகே எடுக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் முயற்சிக்கான பலன் கிடைக்காமல் போகலாம். பணியின் நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் மாலை நேரத்தைச் செலவிட வாய்ப்பு உள்ளது.

தனுசு: உங்கள் எண்ணம் மற்றும் உணர்ச்சிகள் அதிகரிப்பதால், மற்றவர் முன்பு நீங்கள் உணர்ச்சிவசப்படுபவர் போல் தோன்றலாம். குடும்பம் அல்லது தொழில் சம்பந்தமான சந்திப்புகள் ஏற்படக்கூடும். மாலைப் பொழுதில் உங்களை அழகானவராகவும், புத்திசாலியாகவும் காட்டிக்கொள்ள முயல்வீர்கள்.

மகரம்:இன்று, உங்களின் நிலைமை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். உங்களுக்கு வேலை அதிகம் இருந்த போதிலும், உங்களின் தனிப்பட்ட தேவைக்காகச் சிறிது நேரத்தை செலவிடுவீர்கள். பணியாற்றும் இடத்தில் மற்றவர்களின் புகழ்ச்சிக்கும், இனிப்பான வார்த்தைக்கு மயங்கி விடக்கூடாது. இல்லையெனில், பெரும் ஆபத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்படலாம். இந்த நாள் மாணவர்களுக்கு ஏற்ற நாளாக அமையும்.

கும்பம்: இன்று கொண்டாட்டங்களும், சந்தோஷங்களும் நிறைந்த நாளாக இருக்கலாம். நீங்கள் இன்று ஆக்கப்பூர்வமான செயல்களை செய்ய வாய்ப்பு உள்ளது. புதிய நண்பர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அத்துடன், அவர்களின் முக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். இந்த நாள் உங்களுக்கு எல்லாவற்றிலும் சிறந்த நாளாக இருக்கக்கூடும்.

மீனம்:இன்று, நீங்கள் மற்றவர்களுடன் இணைந்து செய்யும் செயலால் நன்மை கிடைக்கப் பெறும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களின் வாழ்க்கைத் துணையைக் கண்டறியும் நாளாக அமையக்கூடும். உறவுகளிடம் அன்பு செலுத்தி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் வேலையில் உங்களைப் புரிந்து கொண்டுள்ள சிறந்த பங்குதாரரை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க: Weekly Horoscope: 'காதலுக்கு சிறந்த வாரம்' - மே 3-வது வாரத்திற்கான ராசிபலன்கள்!

ABOUT THE AUTHOR

...view details