அனைத்து சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கூட்டம்
தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், இன்று மாலை 5 மணிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
அனைத்து சட்டப்பேரவை கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இன்று ஆர்ப்பாட்டம்.
இஸ்ரேலில் அரங்கேறும் தாக்குதலை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அசாமில் இன்று முதல் 15 நாள்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு
கரோனா பரவலை கட்டுபடுத்த, புதிய கட்டுபாடுகளுடன் இன்று முதல் 15 நாள்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அசாம் அரசு அறிவித்துள்ளது.
செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்ட தினம்
முகலாயப் பேரரசர் ஷாஜகான் 1638-ஆம் ஆண்டு மிகப்பெரிய கோட்டையாக செங்கோட்டையைக் கட்டத் தொடங்கினார். 10 ஆண்டுகள் கடும் உழைப்பின் பயனாக 1648-ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி இந்தக்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.93.84-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.87.49-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.