1. இன்று உலக உழைப்பாளர்கள் நாள்
மே தினம் எனப்படும் உலக உழைப்பாளர்கள் நாள் ஆண்டுதோறும் மே முதலாம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, உழைக்கும் மக்களுக்குப் பலர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
இன்று உலக உழைப்பாளர்கள் நாள் 2. 18 வயது மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி இன்று கிடையாது
மே 1ஆம் தேதிமுதல் 18 வயது மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், போதுமான அளவு தடுப்பூசி கைவசம் இல்லாததால், இன்று 18 வயது மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி திட்டம் தொடங்கப்படாது எனத் தமிழ்நாடு சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் அறிவித்துள்ளார்.
18 வயது மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி இன்று கிடையாது 3. கிராமசபை ரத்து - தமிழ்நாடு அரசு உத்தரவு
கரோனா 2ஆம் அலை காரணமாக, இன்று (மே 1) தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருந்த கிராம சபை ரத்துசெய்யப்படுகிறது எனத் தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கிராம சபை ரத்து - தமிழ்நாடு அரசு உத்தரவு 4. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இன்று இந்தியா வருகை
இந்தியாவில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் தொகுப்பு இன்று (மே 1) இந்தியா வரவுள்ளது.
5. ஐபிஎல் 2021: சென்னை - மும்பை மோதல்
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் 27ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.