பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் சாலையில் உள்ள மரங்களில் ஆணி மற்றும் கூர்மையான பொருள்களை அடிப்பது, விளம்பரப் பதாகைகளை வைப்பது போன்றவைத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மரங்களைப் பாதுகாக்குமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஈடிவி பாரத் செய்தி வெளியிட்டது.
இந்தச் செய்தி ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் வினோத், தனது நண்பர்களை இணைத்துக்கொண்டு மரங்களைப் பாதுகாக்க பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
'ஆணி மற்றும் சுவரொட்டி இல்லாத மரம்' எனத்தலைப்பிட்ட, இந்தப் பரப்புரைக்கு கன்னட நடிகர் கிஷோர் உள்ளிட்டோரும் ஆதரவுத் தெரிவித்துள்ளனர். பல தன்னார்வலர்களும் ஆதரவுத் தெரிவித்துள்ளனர். மேலும், மரங்களில் உள்ள ஆணி, பதாகைகளையும் அகற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்தப் பரப்புரை குறித்து பேசிய வினோத், 'ஒரு சிறிய பொருள் நம்மை குத்தினாலே நாம் துடித்துப்போகிறோம். ஆனால், நம்மை பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ள மரங்களை, எவ்வித சிந்தனைகளுமின்றி, ஆணி அடிக்கிறோம். விளம்பரப் பதாகைகளை மாட்டி வருகிறோம்.