தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹெலிகாப்டர் விபத்து: விமானிகளைத் தேடும் பணி 7ஆவது நாளாக நீடிப்பு! - ராணுவ ஹெலிகாப்டர்

ஜம்மு-காஷ்மீரில் ஆகஸ்ட் 4ஆம் தேதி ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் மாயமான விமானிகளைத் தேடும் பணி ஏழாவது நாளாக நீடித்து வருகிறது.

Massive search operation in Ranjit Sagar Dam
Massive search operation in Ranjit Sagar Dam

By

Published : Aug 10, 2021, 11:55 AM IST

Updated : Aug 10, 2021, 12:04 PM IST

ஸ்ரீநகர்:ஜம்மு-காஷ்மீர்-பஞ்சாப் எல்லையில் உள்ள ரஞ்சித் சாகர் அணையில், ஆகஸ்ட் 4ஆம் தேதி பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில், இரண்டு விமானிகள் இருந்தனர்.

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்த தகவலறிந்த மாநில பேரிடர் மீட்புப் படையினரும், ராணுவ வீரர்களும் விபத்து நடந்த இடத்தில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அணையின் ஆழம் 500 அடிக்கும் மேலிருப்பதாலும், தற்போது அங்கு மோசமான வானிலை நிலவுவதாலும் நீர்மூழ்கி வீரர்கள் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்களைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக ஏழாவது நாளாக விமானிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலம், பதான்கோட் மாவட்டத்தில் உள்ள ராணுவ பாதுகாப்புப் படைத் தளத்தில், விமானப் படை வீரர்கள் இலகுரக ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாகும்.

இதையும் படிங்க:அமெரிக்காவில் விமான விபத்து- 6 பேர் உயிரிழப்பு!

Last Updated : Aug 10, 2021, 12:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details