தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முகக்கவச தொழிற்சாலையில் தீ விபத்து: இருவர் உயிரிழப்பு - தொழிற்சாலையில் தீ விபத்து

சூரத் அருகே முகக்கவச தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 125 பேர் மீட்கப்பட்ட நிலையில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

Massive Fire Broke out in a Factory of Surat  One worker Died  15 injured  முககவச தொழிற்சாலையில் தீ விபத்து  சூரத் முககவச தொழிற்சாலையில் தீ விபத்து  தீ விபத்து  தொழிற்சாலையில் தீ விபத்து  குஜராத் தொழிற்சாலையில் தீ விபத்து
தீ விபத்து

By

Published : Oct 18, 2021, 11:23 AM IST

Updated : Oct 18, 2021, 12:05 PM IST

குஜராத்:சூரத் மாவட்டம் பல்சானா தாலுகா, வாரேலி கிராமத்திலுள்ள முகக்கவசம் தொழிற்சாலையில் இன்று (அக்டோபர் 18) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இத்தொழிற்சாலையில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துவருகின்றனர். இந்நிலையில், இன்று (அக்டோபர் 18) காலை ஏற்பட்ட தீ விபத்தில் அனைவரும் சிக்கிக்கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திக்குச் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் இருந்தன.

முகக்கவச தொழிற்சாலையில் தீ விபத்து

இச்சம்பவத்திலிருந்து குழாயைப் பிடித்து தப்ப முயன்ற ஒருவர், தீக்காயங்களுடன் கீழே விழுந்து உயிரிழந்தார். மேலும் 15 பேர் தீக்காயங்களுடன் தப்பியுள்ளனர். அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 125 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கேரள நிலச்சரிவில் உயிரிழப்பு 23ஆக உயர்வு

Last Updated : Oct 18, 2021, 12:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details