விசாகப்பட்டினம்:ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நள்ளிரவு சுமார் 12 மணிக்கு ஒரு படகில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு தீ மற்ற படகுகளுக்குப் பரவிய நிலையில், படகுகளில் சமையல் செய்ய வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதாகக் கூறப்படுகிறது.
விசாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து: 40க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதம்! - விசாகப்பட்டினம் துறைமுகம்
Vizag harbour fire accident: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதமானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
visakhapatnam fishing harbour
Published : Nov 20, 2023, 7:56 AM IST
இந்த பயங்கர தீ விபத்தில் கொளுந்துவிட்டு எரிந்த தீயால் மீன்பிடித் துறைமுக பகுதியே புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. இந்த தீ விபத்தில் இதுவரை சுமார் 40 படகுகள் தீயில் எரிந்து சேதமடைந்தாக கூறியுள்ள உள்ளூர் போலீசார், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து! இந்திய வீரர்களுக்கு ஆறுதல்!