தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிவாஜி மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து - சிவாஜி மார்கெட் தீ விபத்து

புனேவில் உள்ள சிவாஜி மார்க்கெட்டில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 25 கடைகள் சேதமடைந்துள்ளன.

தீ விபத்து
தீ விபத்து

By

Published : Mar 16, 2021, 2:06 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சத்ரபதி சிவாஜி மார்க்கெட்டில் உள்ள கடை ஒன்றில் இன்று (மார்ச்16) அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சிவாஜி மார்க்கெட்டில் பயங்கர தீ

இருப்பினும் தீ அடுத்தடுத்த கடைகளுக்கு பரவியது. அதனால் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்தத் தீ விபத்தில் மார்க்கெட்டில் உள்ள 25 இறைச்சிக் கடைகள் எரிந்து நாசமாகின. அத்துடன் கடைகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட கோழிகளும், ஆடுகளும் தீயில் கருகி உயிரிழந்தன.

இதையும் படிங்க:தேங்காய் நார் உற்பத்தி ஆலையில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்

ABOUT THE AUTHOR

...view details