குஜராத் மாநிலம், அகமதாபாத் அடுத்த வத்வா பகுதியில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இன்று (டிச. 09) காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, இருபதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துவருகின்றனர்.
அகமதாபாத் ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து! - அகமதாபாத் ரசாயன தொழிற்சாலை தீ விபத்து
குஜராத்: அகமதாபாத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
chemical factoru fire accident in ahmedabad
இருப்பினும் தொழிற்சாலையிலிருந்து ஒரு பெரிய அளவிலான புகை வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதேபோல், கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச. 06) பாபுநகர் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதில் சுமார் 20 கடைகள் சேதமாகின என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அகமதாபாத்தில் பயங்கர தீ விபத்து: கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் நாசம்