ஆந்திரா:முக்கிய வைணவ ஸ்தலமான திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் குவிந்தது. கரோனா ஊரடங்கிற்கு பின் கோயில் நடை திறக்கப்பட்டதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனையடுத்து, திருப்பதி முழுக்க பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த மாதத்தின் ஏகாதசியை முன்னிட்டு, கருட சேவை தரிசனத்தைக் காண பக்தர்கள் 48 மணி நேரமாக வரிசையில் நின்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
அதிக பக்தர்கள் கூட்டத்தால் ஸ்ரீவாரி தரிசனத்திற்கு அதிக நேரம் எடுத்தது. வைகுண்ட தரிசனத்திற்கான வரிசை சுமார் 2 கி.மீ அளவுக்கு நீண்டு காணப்பட்டது. மேலும், சர்வ தரிசனத்திற்கான வரிசை வெங்கமாம்பா அன்னதான சத்திரத்தையும் தாண்டி சென்றது. மேலும் அன்னதான வளாகத்தில் இருக்கும் 32 கம்பார்ட்மெண்டுகள் மற்றும் தோட்டம் வரை பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.