புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் அஜீஸ் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, " புதுச்சேரியில் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளியில் சேர வரும் மாணவர்களிடம் போதிய கட்டிடங்கள் இல்லை, ஆசிரியர்கள் இல்லை, அடிப்படை வசதிகள் இல்லை என்ற காரணத்தை கூறி, கல்வித்துறை அலுவலர்களும், சில தலைமை ஆசிரியர்களும் குழந்தைகளை சேர்க்காமல் திரும்பி அனுப்பும் அவலநிலை உள்ளது.
இது ஏழை மாணவர்களுக்கு செய்யக் கூடிய மிகப்பெரிய அநீதியாகும். தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் தருவதில்லை. அரசு பள்ளியில் சேர வரும் ஏழை, எளிய மாணவர்களை திரும்பி அனுப்பாமல் உடனே சேர்த்துக் கொள்ள வேண்டும். மாற்றுச்சான்றிதழ் கட்டாயம் என நிர்பந்திக்க கூடாது என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மதசார்ப்பின்மை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகிறன" என்றார்.
இதையும் படிங்க:சுதந்திர தினம்: ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்