புதுச்சேரி மாநிலத்தில் பல ஆண்டுகளாக ரேஷன் கடைகள் மூடப்பட்டு, அத்தியாவசியப் பொருட்கள் வழங்காமல் நிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அதில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாதந்தோறும் விளிப்புநிலை மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசியை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என அரசு அறிவித்தும் ரேஷன் கடைகள் திறக்கப்படாமல் உள்ளதாகக் குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.
இதனால், ரேஷன் அட்டை உள்ள பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் முற்றிலுமாக தடைப்பட்டிருப்பதாகவும், அருகேயுள்ள தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணொய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுவதை பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியிலும் இதேபோல், ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்கள் வழங்க வலியுறுத்தி, புதுச்சேரி தலைமை செயலக காத்திருப்பு போராட்டத்தை புதுச்சேரி மாநில மார்க்கிஸ்ட் கட்சியினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் இன்று (ஆக.2) பெரியார் சிலையில் இருந்து ஊர்வலமாக தலைமை செயலகம் நோக்கி சென்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனிடையே அவர்களை நேரு வீதி மற்றும் மிஷன் வீதி சந்திப்பில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.