தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹரியானாவில் கூட்டு பாலியல் வன்புணர்வு - கணவர், காவலர் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு! - ஹரியானா செய்திகள்

Married woman raped by husband, a police and 5 in Haryana: ஹரியானாவில் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கணவர், காவலர் உள்பட 7 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 9:02 PM IST

பல்வால் (ஹரியானா): கடந்த ஜூலை 23 அன்று, பெண் ஒருவர் ஹரியானா மாநிலத்தின் ஹசான்பூர் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வந்து உள்ளார். ஆனால், அப்புகாரை காவல் உதவி ஆய்வாளர் ஷிவ் சரண் வாங்க மறுப்பு தெரிவித்து உள்ளார். அது மட்டுமல்லாமல், தனது கூட்டாளி பல்லி என்பவர் உடன் அருகில் உள்ள ஒரு இடத்திற்குச் செல்லுமாறும் கூறி அனுப்பி வைத்து உள்ளார். இவ்வாறு, உதவி ஆய்வாளர் அனுப்பிய இடத்தில் நிரஞ்சன் மற்றும் பீமா ஆகிய இருவர் காத்துக் கொண்டு இருந்து உள்ளனர்.

இதனையடுத்து, பல்லி, நிரஞ்சன் மற்றும் பீமா ஆகிய மூவரும் அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து உள்ளனர். அது மட்டுமல்லாமல், அதனை வீடியோவாக பதிவு செய்த மூவரும், அதனை இணையத்தில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டி உள்ளனர். இதனையடுத்து, பெண்ணை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு, மீண்டும் அவரை ஒரே இரவில் வேறு ஒரு இடத்திற்கு வரச் சொல்லி, தொடர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி உள்ளனர்.

அது மட்டுமல்லாமல், பிஜேந்திரா மற்றும் அவரது மைத்துனர் கஜேந்திரா ஆகிய இருவருக்கும் அப்பெண்ணை விற்று உள்ளனர். பின்னர், அவர்கள் காவல் உதவி ஆய்வாளர் ஷிவ் சரண் கண் முன்பே பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து உள்ளனர். அதிலும், தொடர்ந்து மூன்று நாட்கள் அப்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில், அங்கு இருந்த ஒருவரின் மொபைல் மூலம் காவல் துறைக்கு அப்பெண் தகவல் அளித்து உள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அப்பெண்ணை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்து உள்ளனர். பின்னர், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், ஹசான்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர், சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் உள்பட 7 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஓடும் காரில் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்புணர்வு - உ.பி.யில் அதிர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details