ஹைதராபாத்: மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப்பில், பயனர்களின் சாட்டிங் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக எமோஜிகள், ஸ்டிக்கர்கள் உள்ளிட்டவற்றை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் டிஜிட்டல் அவதார் அப்டேட்டை வாட்ஸ்அப்பில் கொண்டுவரப்போவதாக மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
இந்த அப்டேட் மூலம் பயனர்கள் தங்களது தனிப்பட்ட ஸ்டிக்கர்களை உருவாக்கி, அவற்றை சாட்டிங்கில் பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த தனிப்பட்ட அவதார்களை புரொஃபைல் ஃபோட்டோவாகவும் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மார்க் ஜுக்கர்பெர்க் கூறும்போது, "இந்த டிஜிட்டல் அவதார்களை, பல விதமான ஹேர் ஸ்டைல்கள், முக அம்சங்கள், ஆடைகளில் உருவாக்கலாம். லட்சக்கணக்கான காம்பினேஷன்களில் இந்த அவதார்களை உருவாக்கிக் கொள்ளலாம். இது விரைவில் எங்களது எல்லா ஆப்களிலும் கொண்டுவரப்படும்.
லைட்டிங், ஷேடிங் உள்ளிட்ட ஸ்டைல் மேம்பாடுகள் தொடர்ந்து வழங்கப்படும். அவை அவதார்களை இன்னும் சிறப்பாக மாற்றும். அதேபோல் ஹாரிசன் வேர்ல்டு விர்ச்சுவல் ரியாலிட்டி தளத்தில் பல்வேறு தனிப்பட்ட அம்சங்களைக் கொண்டு வர வேலை செய்து வருகிறோம். ஹாரிசன் வேர்ல்டிலும் விர்ச்சுவல் அவதார்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: 2022-ன் டாப் மோஸ்ட் ஆப், கேம்?