தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மார்கதர்சி சிட்ஃபண்ட் 60 ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் - ராமோஜி ராவ் மார்கதர்சி நிதி நிறுவனத்தை தொடங்கினர்

பிரபல மார்கதர்சி சிட்ஃபண்ட் நிறுவனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் நிறுவனத்தின் இயக்குநர் கிரண் ஷைலஜா தலைமையில் ஹைதராபாத்தில் நடைபெற்றது.

Etv Bharatமார்கதர்சி சிட்ஃபண்ட் 60 ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்
Etv Bharatமார்கதர்சி சிட்ஃபண்ட் 60 ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்

By

Published : Oct 1, 2022, 1:11 PM IST

Updated : Oct 1, 2022, 1:17 PM IST

ஹைதராபாத்:ஹைதராபாத்தில் 60 ஆண்டுகளுக்கு முன் ராமோஜி ராவ் மார்கதர்சி சிட்ஃபண்ட் என்ற நிதி நிறுவனத்தை தொடங்கினர். ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர்களுக்கும், மாத ஊதியம் வாங்குபவர்களுக்கும் சேமிப்பு மற்றும் நிதி பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட நிதி நிறுவனமாகும். இந்நிறுவனம் 1962 ஆம் ஆண்டு ஹிமாயத் நகரில் உள்ள சிறிய அலுவலகத்தில் இரண்டே ஊழியர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இந்நிறுவனம் 4300 பணியாளர்களுடன் தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பல கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.

தென் மாநிலங்களில் 108 கிளைகள்:60 ஆண்டுகளுக்கு முன் ராமோஜி ராவ் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு தென் மாநிலங்களில் 108 கிளைகளைக் கொண்டுள்ள பெரிய நிதி நிறுவனமாக மாறியுள்ளது. அந்நாள்களில் நடுத்தரக் குடும்பங்களுக்கு நிதிப் பாதுகாப்பு பெரும் முட்டுக்கட்டையாக இருந்த காரணத்தால் அதனை எளிமைப்படுத்தும் நல்ல நோக்கத்தில் ராமோஜி இந்நிறுவனத்தை தொடங்கினார்.

இந்நிறுவனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று (செப்-30) கொண்டாடப்பட்டது. விழாவில் பேசிய நிறுவனத்தின் இயக்குநர் ஷைலாஜா கிரண், "கரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டுகளில் அடையாத நிறுவனத்தின் இலக்கான ரூ.12 கோடி இலக்கை இந்த ஆண்டு அடைந்து விடுவோம் என தெரிவித்தார். மேலும் சிட் ஃபண்ட் துறையில் கடுமையான ஜிஎஸ்டி விதிக்கப்படுவதால், உறுப்பினர்கள் நிறுவன சிட் ஃபண்டுகளில் இருந்து முறைப்படுத்தப்படாத சிட் ஃபண்டுகளுக்கு மாறும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார். மத்திய அரசு இதை ஒருமுறை பரிசீலித்து ஜிஎஸ்டி குறித்து முடிவு எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

மேலும் பேசுகையில், ‘ ராமோஜி ராவ் நிறுவனத்தை தொடங்கிய நாளில் இருந்து, அதன்பின்னர் ஒவ்வொரு மார்கதர்சி குடும்ப உறுப்பினர்களின் மனதிலும் ஆழமாகப் பதிந்திருக்கும் பாரம்பரியமாக மாறியதற்கும், நிறுவனத்தின் இந்த அற்புதமான வெற்றிக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என கூறினார். மேலும் நிதி உள்ளிட்ட செயல்பாடுகளில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மார்கதர்சி நிறுவனம் பெற்று விட்டது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

மார்கதர்சி நிறுவனத்தின் மதிப்பு, நிதி முறையிலான ஒழுக்கம், தொழில்முறை ஒருமைப்பாடு,நெறிமுறை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மைக்கும், அவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக விளங்குவதாக தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், ‘சமூகத்தின் அனைத்துப் பிரிவைச் சேர்ந்த மக்களும் மார்கதர்சி நிறுவனத்தின் சந்தாவால் பயனடைந்துள்ளனர். அவர்களின் கனவுகள் மற்றும் இலக்குகளை நனவாக்கியுள்ளனர். சம்பளம் வாங்கும் ஊழியர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் அல்லது பெரிய அளவிலான வணிக உரிமையாளர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் தேவைகள் வேறுபட்டாலும், அவர்களின் சேமிப்பு குறித்த முடிவு மார்கதர்சியில்தான் என்பதில் சந்தேகமில்லை" என கூறினார்.

மார்கதர்சி நிறுவனத்தின் கனவுகள் மற்றும் இலக்குகளை மேம்படுத்தி 60 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் இந்த தருணத்தில், நிறுவனத்தின் தலைமைக் குழு மற்றும் மார்கதர்சியின் ஒவ்வொரு உறுப்பினர்ருக்கும் அவர்கள் நிறுவனத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

இதையும் படிங்க:உபியில் 18 மணி நேரமாக வகுப்பறைக்குள் பூட்டப்பட்ட 1ஆம் வகுப்பு மாணவி... ஆசிரியர்கள் சஸ்பெண்ட்...

Last Updated : Oct 1, 2022, 1:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details