தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

WEEKLY HOROSCOPE: மார்ச் 12 முதல் 18ஆம் தேதி வரையிலான வார ராசிபலன்கள்!

WEEKLY HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்திற்கான ராசிபலன்களை காண்போம். இது மார்ச் 12 முதல் 18 வரையிலான வார ராசிபலன்களை உள்ளடக்கியதாகும்.

WEEKLY HOROSCOPE
WEEKLY HOROSCOPE

By

Published : Mar 12, 2023, 6:52 AM IST

மேஷம்: இந்த வாரம் எதையாவது நினைத்து மிகவும் கவலைப்படுவீர்கள். காதல் விவகாரங்களுக்கு உங்கள் நேரம் பலவீனமாக உள்ளது, எனவே உங்கள் காதலிக்கு முழு இடத்தினை அளித்திடுங்கள். அதனால் அவர்களுடைய மனதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவார்கள், பதற்றமும் இல்லாமல் இருக்க முடியும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலை மோசமடையடலாம். இதன் காரணமாக, சில சிக்கல்கள் ஏற்படலாம். வேலை பார்ப்பவர்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்க வாய்ப்புண்டு. இதிலிருந்து, சம்பள உயர்வுக்கான அதிக வாய்ப்புள்ளது. தொழில்புரிபவர்கள் கடந்த காலங்களில் எடுத்த முயற்சிகளினால் இன்று பலன் கிடைக்கும்.

தொழில் புரியும் பெண்களுக்கு நண்பர்களால் தொழிலில் லாபகரமான சூழ்நிலை நிலவும். மாணவர்களை பொறுத்தவரை, அவர்கள் மீது படிப்பின் அழுத்தம் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நல்ல உடல்நலத்துடன் காணப்படுவீர்கள். சிறந்த ஆரோக்கியத்திற்கு ஏதேனும் உடற்பயிற்சி செய்யலாம் அல்லது ஏரோபிக்ஸை நாடலாம். வாரத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது நாட்கள் உங்களுக்கு மிகவும் சாதகமான நாட்களாக இருக்கிறது.

ரிஷபம்: இந்த வாரம் பயணங்கள் மேற்கொள்வீர்கள். இதன் மூலம் திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை வலுவடைந்து ஒருவரின் மீது ஒருவருக்கு நெருக்கம் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு சில புதிய பிரச்சினைகள் உங்களுக்காக காத்திருக்கின்றன, அவற்றை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும். வேலை செய்பவர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் இருக்கும், அது உங்கள் வேலை செய்யும் முறையை மாற்றும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.

கடனைத் திருப்பிச் செலுத்த கடினமாக இருக்கும், எனவே மிகவும் கவனமாக உங்கள் தேவைக்கேற்ப மட்டுமே கடன் வாங்கிக்கொள்ளுங்கள். வேலையைப் பற்றி கொஞ்சம் கவலைப்படவும் செய்வீர்கள். மாணவர்களை பொறுத்தவரை, இந்த வாரம் அவர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். படிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இப்போது நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இருப்பினும், உடம்பில் பெரிய பிரச்சினை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. வாரத்தின் கடைசி இரண்டு நாட்கள் பயணத்திற்கு உகந்ததாக இருக்கும்.

மிதுனம்: இந்த வாரம் உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். காதலிப்பவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். உங்கள் காதலுக்குள் இருக்கும் சலிப்பை போக்க புதிதாக ஏதாவது செய்வீர்கள். நீங்கள் காதலிப்பவரை ரொமாண்டிக்காக உணர வைப்பீர்கள், இது உங்களுக்கு இடையிலான தூரத்தை குறைக்கும் மற்றும் உங்கள் நெருக்கத்தை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். இது உங்கள் குடும்ப வாழ்க்கையை இன்னும் சிறப்பாக மாற்றும்.

வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பானதாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரியைக் கவர எந்த முயற்சியும் எடுக்கவேண்டாம். தொழில்புரிபவர்களுக்கு தொழிலில் நல்ல சூழ்நிலை காணப்படுகிறது. கடின உழைப்பு வெற்றியடையும், இதன் காரணமாக உங்கள் தொழில் விரிவடையும். மாணவர்களை பொறுத்தவரை, அவர்கள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள், இது நல்ல முடிவுகளைத் தரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று பலவீனமாக இருக்கலாம். முதுகு வலியால் அதிக சிரமம் ஏற்படலாம். இந்த வாரம் பயணத்திற்கு மிகவும் சாதகமாக இல்லை, எனவே பயணம் மேற்கொள்ள வேண்டாம்.

கடகம்: இந்த வாரம் உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு இல்லற வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவு உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இது காதலிப்பவர்களுக்கு நல்லது. உங்களுக்குள் தீவிரம் அதிகரிக்கும், இருவரும் உறவில் நேர்மறையாக இருப்பீர்கள். வார முற்பகுதியில், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சில பதட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். வீட்டில் இருப்பவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படலாம். இது உங்கள் வேலையையும் பாதிக்கும்.

எனவே, வேலையில் இடையூறு ஏற்படாத வகையில் கவனமாக செயல்படுங்கள். உங்களுடன் பணிபுரிபவர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். உங்களைப்பற்றியோ அல்லது உங்களிடமோ யாரும் புகார் செய்யக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தொழில்புரிபவர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக இருக்கும். தற்போதைக்கு புதிதாக முதலீடுகள் எதுவும் செய்ய வேண்டாம், உங்கள் தொழிலை எதிரிகள் அனைவரிடமிருந்தும் பாதுகாக்க முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் இப்போது பழைய திட்டங்களைத் தொடங்குவது குறித்து பரிசீலிக்கலாம். அதன் மூலம் நீங்கள் பயனடையலாம். மாணவர்களை பொறுத்தவரை, அவர்களுக்கு சாதாரணமாக இருக்கிறது. படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, இப்போது நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். வார முற்பகுதியில் பயணங்கள் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்: இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக அமையப்போகிறது. திருமணமானவர்கள் இல்லற வாழ்க்கையில் டென்ஷனை உணர்வார்கள். வாழ்க்கைத் துணையைப் பற்றிய புரிதல் குறையலாம். காதலிப்பவர்கள் உறவில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் எங்கேயாவது செல்வதற்கும் அல்லது நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றுவதற்கு திட்டமிடலாம். நண்பர்களுடன் நல்லுறவைப் பேணுங்கள். எங்கு வேலை செய்தாலும் சக ஊழியர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். வரும் நாட்களில் இதன் பலன்களை நீங்கள் அதிகம் காணலாம்.

தொழில்புரிபவர்கள் சற்று புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். எந்த ஒரு செயலையும் உற்சாகத்துடன் செய்ய வேண்டாம், அது உங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். நீதிமன்ற வழக்குகளில் கவனமாக இருங்கள், வியாபாரத்திலும் வெளிப்படைத் தன்மையை கடைபிடியுங்கள். மாணவர்களை பொறுத்தவரை, அவர்கள் இன்னும் படிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும். கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த நேரம் உங்களுக்கு நல்லதாக இருக்கும். இருப்பினும், உணவில் கவனமாக இருக்க வேண்டும். வார முற்பகுதியில் பயணங்கள் சிறப்பாக இருக்கும்.

கன்னி: இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். திருமணமானவர்கள் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். இருப்பினும், காதலிப்பவர்களுக்கு நேரம் சற்று பலவீனமாக உள்ளது, எனவே இப்போது எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். இப்போது செலவுகள் அதிகரிக்கும். வருமானத்தின் வேகமும் சீராக இருக்கும். உங்கள் பணத்தையும் நல்ல முறையில் பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். உறவினர்களிடம் கடுமையாக பேசாதீர்கள், அது குடும்ப உறவுகளை கெடுத்துவிடும்.

வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் அனுகூலமான வாரமாக இருக்கும். முயற்சி செய்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். வேறு துறைக்கு நீங்கள் மாற்றப்படலாம். உங்கள் தொழிலி இருந்து வந்த லாப நிலை, இப்போது சற்று குறைய தொடங்கும். இருப்பினும், உங்கள் வேலையை நீங்கள் அனுபவிப்பீர்கள். மாணவர்களை பொறுத்தவரை, படிப்பில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். அதற்கு ஒரு வழிகாட்டி தேவை. உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் சற்று பலவீனமாக இருக்கும். எனவே உணவில் அதிக கவனம் செலுத்துங்கள். உடல்நிலை மோசமடையக்கூடும் என்பதால் மருத்துவரை அணுகுவது நல்லது.

துலாம்: இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். திருமணமானவர்களுக்கு இல்லற வாழ்க்கையில் அன்பையும், காதலையும் உணர்வார்கள். இதனால் உறவில் சில காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வெளிநபரையும் காதலிக்கலாம், அவரைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள், இல்லையெனில், திருமண வாழ்க்கையில் சவால்கள் அதிகமானதாகவே இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல உறவைப் பேணுங்கள். காதலிப்பவர்களுக்கு நன்றான காலமிது. காதலிப்பவருடம் திருமணம் பற்றி பேச விரும்பினால், சிறிது காலம் காத்திருங்கள். இப்போது நேரம் அவ்வளவு சாதகமாக இல்லை.

வேலையில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், வேலையில் மட்டுமே கவனத்தை செலுத்துங்கள். வேலையைச் சிறப்பாகச் செய்ய முயற்சி செய்யுங்கள், இல்லையெனில், வேலை மாறக்கூடும், அதாவது, வேலையை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம், வேறு வேலையைத் தேடும் சூழ்நிலை ஏற்படும். தொழில்புரிபவர்களுக்கு நேரம் சிறப்பாக இருக்கிறது. நண்பரின் ஆதரவு கிடைப்பதால் அதில் வெற்றியை காண்பீர்கள். மாணவர்களைப் பொறுத்தவரை, இப்போது நிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை, சில சின்னச் சின்ன பிரச்சனைகள் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். இருப்பினும், சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவதன் மூலம் நீங்கள் அதிலிருந்து விடுபடலாம். பயணங்களுக்கு சாதகமான வாரம்.

விருச்சிகம்: இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பப் பிரச்சினைகள் மனதைக் கவலையடையச் செய்து சற்று அமைதியற்று இருக்கும். வார முற்பகுதியில் சிறுசிறு செலவுகள் ஏற்படும், அதன் பிறகு நிலைமை கட்டுக்குள் இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். பணம் எங்கேயாவது சிக்கியிருந்தால், அதையும் மீட்கும் காலமிது.

வங்கிக் கடன் அல்லது வேறு ஏதேனும் கடன் பட்டிருந்தால், அதை திருப்பிச் செலுத்துவதில் நீங்கள் முழுமையாக வெற்றி பெறுவீர்கள். நீங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். கவனமின்மையால் வேலையில் சிக்கல்கள் ஏற்படலாம். இதனால் வேலையில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

தொழில்புரிபவர்களுக்கு நல்ல நேரமிது. வேலையில் முழு கவனத்தையும் செலுத்துங்கள், அதை சிறப்பாக செய்ய முயற்சி செய்யுங்கள், இந்த நேரம் உங்களுக்கு நல்லது. மாணவர்களை பொறுத்தவரை, அவர்கள் தங்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். நிதி மற்றும் நுண்கலை மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த முறை சாதாரணமாக இருக்கும். பெரிய உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பில்லை. வாரத்தின் கடைசி இரண்டு நாட்கள் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

தனுசு: இந்த வாரம் அனுகூலமான வாரமாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாகத் தோன்றுவார்கள், ஆனால் அவர்களுக்குள் ஈகோ மோதல் ஏற்படலாம். கவனமாக இருங்கள் இந்த நேரம் காதலிப்பவர்களுக்கு சற்று சவாலாக இருக்கும். ஒருவருக்கொருவர் தவறான புரிதல்கள் ஏற்படலாம், அதை அகற்றுவதும் உங்கள் பொறுப்பாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் பிரச்சினைகள் ஏற்படலாம். அவர்கள் உங்களைக் கீழே தள்ளவும், உங்கள் வேலையை சீர்குலைக்கவும் முயற்சி செய்யலாம்.

மாணவர்களை பொறுத்தவரை, இப்போது அவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். போட்டியிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த முறை ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். தோள்பட்டை மற்றும் மூட்டு வலி தொந்தரவு ஏற்பட வாய்ப்புள்ளது. வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் பயணத்திற்கு உகந்ததாக இருக்கும்.

மகரம்: இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையை அனுபவிக்க முயற்சிப்பார்கள். இருப்பினும், குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் உங்களைத் தேடி வரலாம். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். இப்போது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த வாரம் நீங்கள் ஒரு கேஜெட் வாங்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனம் தேவை. கவனக்குறைவு காரணமாக எச்சரிக்கையைப் பெறலாம், எனவே கவனமாக இருங்கள்.

தொழில்புரிபவர்களுக்கு நேரம் நல்லது, ஆனால் அரசாங்கத்திற்கு எதிராக வேலைகளை செய்வது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். மாணவர்களை பொறுத்தவரை, நன்றாக படிக்க விரும்புவார்கள். அவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் வெற்றி பெற முடியும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது முக்கியம். அதை கவனிக்கவில்லை என்றால், நோய் பெரிதாக ஏற்படலாம், எனவே கவனமாக இருங்கள், நன்றாக சாப்பிடுங்கள். உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்துங்கள். வாரத் தொடக்கம் பயணங்களுக்கு சாதகமானது.

கும்பம்: இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையை காப்பாற்ற தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வார்கள். அவர்கள் பிரச்சினைகளைப் போக்க வாஸ்து பரிகாரங்களைப் பின்பற்றலாம். காதலிப்பவர்களுக்கு காலம் நன்றாக இருக்கும். காதலிப்பவருடன் நிறைய உரையாடல்களை மேற்கொள்வீர்கள், மேலும் உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வீர்கள். ஒருவருக்கொருவர் உதவுவது உங்கள் உறவை வலுப்படுத்தும்.

இப்போது உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் பலன் கிடைக்கும், இதன் காரணமாக உங்கள் வேலையில் வெற்றியடைவீர்கள். உங்கள் வேலையை மிக விரைவாக முடிக்க முயற்சிப்பீர்கள். நீண்ட தூரப் பயணமும் செய்யலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நேரமிது. இருப்பினும், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். தொழில்புரிபவர்களுக்கு கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். நீங்கள் மிகவும் கடினமாக உழைப்பீர்கள், இதனால் நீங்கள் சிறந்தவர்களில் ஒருவராக கருதப்படுவீர்கள்.

மாணவர்களை பொறுத்தவரை, படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். சிலரது சகவாசம் உங்கள் படிப்புக்கு இடையூறாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இப்போது நேரம் சற்று பலவீனமாக உள்ளது. சாப்பாடு விஷயத்தில் கவனமாக இருங்கள், தேவைப்பட்டால் மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள். வாரத் தொடக்கம் பயணங்களுக்கு உகந்தது.

மீனம்: இந்த வார முற்பகுதி சற்று பலவீனமாக இருக்கிறது. அதற்கு பிறகு உங்களுக்கு நல்ல நேரம்தான். நல்ல பலன்களும் கிடைக்கும். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். ஒன்றாக நீங்கள் எங்காவது நடைபயிற்சிக்கு செல்லலாம். காதலிப்பவர்களுக்கு நேரம் நன்றாக இருக்கிறது. வேலை செய்பவர்களைப் பற்றி பேசுகையில், இப்போது அவர்களுக்கு சாதகமான நேரமாக இருக்கிறது, மேலும் அவர்கள் முன்னேறுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு வேலையில் திருப்தி ஏற்பட்டு வெற்றி கிடைக்கும்.

வியாபாரத்தில் முன்னேற இந்த நேரம் சிறந்தது. உங்கள் முயற்சிகளை விரைவுபடுத்துங்கள், இதனால் உங்கள் தொழிலில் வேகம் எடுக்கும். மாணவர்களை பொறுத்தவரை, படிப்பில் கவனம் செலுத்துவதில் சில சிரமங்களை உணர்வார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வார முற்பகுதியில், நீங்கள் மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில், உங்கள் உடல்நலம் மோசமடையக்கூடும், மேலும் நீங்கள் மனதளவில் பாதிப்படையக்கூடும். இது தவிர, உடல் வலியும் உங்களைத் தொந்தரவு செய்யும். சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வாரத்தின் நடுப்பகுதி பயணங்களுக்கு உகந்ததாக இருக்கும்.

இதையும் படிங்க: Today Horoscope: மார்ச் 12ஆம் தேதிக்கான ராசி பலன்கள்!

ABOUT THE AUTHOR

...view details