திருவனந்தபுரம்:தமிழ்நாடு- கேரள எல்லையில் அமைந்துள்ள அட்டப்பாடி சோதனைச்சாவடி அருகே கடந்த மார்ச் 11ஆம் தேதி கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை விசாரணை செய்வதற்காக கேரள மாநில காவல்துறை காவலில் எடுத்துள்ளது.
கோவை சிறையிலுள்ள அவரை விசாரிக்க சிறப்பு அனுமதியை நீதிமன்றத்தில் பெற்றுள்ள கேரள மாநில காவல்துறை, பிப்ரவரி 1ஆம் தேதிவரை காவலில் வைத்து விசாரிக்க உள்ளது.
கால்பேட்டா, மனந்தவாடி பகுதியில் பதியப்பட்ட இரு வழக்குகளில் ஸ்ரீமதி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என்றும் அந்த வழக்குகள் தொடர்பாக விசாரிக்கவே காவலில் எடுத்துள்ளதாகவும் வயநாடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் மஞ்சக்கண்டி பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் ஸ்ரீமதி இறந்துவிட்டதாக காவல்துறையினர் நினைத்தனர். அப்போது, உயிரிழந்த மாவோயிஸ்ட்களில் ஸ்ரீமதியின் உடல் அடையாளம் காணப்படாததால், காவல்துறையினர் ஸ்ரீமதி குறித்து மீண்டும் விசாரணையைத் தொடங்கினர். முன்னதாக, கேரள தண்டர்போல்ட் ஸ்ரீமதியை தேடப்படும் நபராக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு