உத்தரப்பிரதேச மாநிலம், பாஹ்ரைச் மாவட்டத்தின் கோத்வாலி நன்பரா பகுதியில் உள்ள மசப்பூர் என்ற கிராமத்தில் மத ஊர்வலம் நடந்துள்ளது. அப்போது மின்சாரம் தாக்கியதில் மூன்று குழந்தைகள் உள்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
உ.பி. மத ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி ஏழு பேர் உயிரிழப்பு - Masupur electrocution issue
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மத ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கியதில், மூன்று குழந்தைகள் உள்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
உ.பி மத ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி ஏழு பேர் உயிரிழப்பு
இதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அவருக்கு பாஹ்ரைச் மருத்துவக்கல்லூரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து முழுமையான விவரங்கள் வெளிவராத நிலையில், காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:மின்கம்பியை மிதித்த கணவன் மனைவி உயிரிழப்பு