லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள ரசாயன ஆலையில் இன்று (ஜூன் 4) பாய்லர் வெடித்ததால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ஆறுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
உ.பி. ரசாயன ஆலையில் பாய்லர் வெடிப்பு: 6 பேர் உயிரிழப்பு - boiler explosion in chemical factory hapur
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
hapur latest news
ஆலையில் பலர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. முதல்கட்ட தகவலில், இந்த விபத்தில் 6 ஊழியர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதையும் படிங்க: டெல்லி விமான நிலையத்தில் தீ... விசாரணைக்கு உத்தரவு!