உத்தரகாசி: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள நேரு மலையேறும் பயிற்சி நிறுவனத்திலிருந்து 40 பேர் கொண்ட குழு, திரௌபதி தண்டா மலை உச்சிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த உத்தகாசி மாவட்ட நிர்வாகம் மீட்புப் பணியில் ஈடுபட்டது. அவர்களுடன் தேசிய மீட்புப் படையினரும், ராணுவ வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
மலையேற்றத்தின்போது பனிச்சரிவு - 7 பேர் சடலமாக மீட்பு, 25 பேர் மாயம்! - விமானப்படை ஹெலிகாப்டர்கள்
உத்தரகாசியில் மலையேற்றத்தின்போது பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் மாயமாகியுள்ளனர்.
மீட்புப் பணியை துரிதப்படுத்துவதற்காக விமானப்படையின் உதவி தேவை என உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து இரண்டு விமானப்படை ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுவரை இரண்டு பயிற்சியாளர்கள் உள்பட 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 25 பேர் மாயமாகியுள்ளனர். பனிச்சரிவில் மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:கேரளாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஊருக்குள் சுற்றித்திரியும் புலி; வைரல் வீடியோ