தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து - national news

உத்தரகாண்ட் மாநிலம், சாமோலீ மாவட்டத்தில் கார் ஒன்று 700 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து
உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து

By

Published : Nov 18, 2022, 10:48 PM IST

சாமோலீ: உத்தரகாண்ட் மாநிலத்தில், சாமோலீ மாவட்டத்தில் கார் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து காவல் துறையினர் கூறுகையில், ”உர்கம் - பல்லா சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கார் ஒன்று 700 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து மாநிலப்பேரிடர் மீட்புக்குழுவுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்திருக்கலாம். இரண்டு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும், மேலும் விபத்தில் சிக்கி காயமுற்றோருக்கு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கர்ப்பிணி மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details