தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 30, 2023, 2:33 PM IST

ETV Bharat / bharat

கோயில் கிணற்றில் தவறி விழுந்த 25 பேரை மீட்கும் பணி தீவிரம்!

கோவிலில் உள்ள படிக் கிணறு இடிந்து விழுந்த விபத்தில் 25 பேர் அதில் சிக்கிக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

இந்தூர் : மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் மாவட்டம் படேல் நகரில் பெலேஷ்வார் கோயில் அமைந்து உள்ளது. ராம நவமியை முன்னிட்டு கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கோயிலில் இருந்த படிக் கிணற்றின் மேல் அனைவரும் நின்று கொண்டு இருந்த நிலையில் அது திடீரென உடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்த திடீர் சம்பவத்தால் படிக் கிணற்றின் மேல் நின்று கொண்டு இருந்த குழந்தை, மூதாட்டி உள்பட ஏறத்தாழ 25 பேர் அப்படியே கிணற்றுக்குள் விழுந்து உள்ளனர். படிக் கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீசாருடன் இணைந்து மாநில பேரிடர் மீட்பு குழுவினர் படிக் கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

படிக் கிணற்றில் தவறி விழுந்தவர்களை உயிருடன் உடனடியாக மீட்கக் கோரி மாநில பேரிடர் மீட்பு குழு மற்றும் போலீசாருக்கு மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டு உள்ளார். ராம் நவமி பண்டிகையை கொண்டாட கோயிலுக்கு வந்த பக்தர்கள் படிக் கிணற்றில் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க :கேரளாவில் வடமாநில சிறுவன் குத்திக் கொலை - என்ன காரணம் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details