தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேசிய அளவிலான நிமோனியா தடுப்பூசித் திட்டம் தொடக்கம்

தேசிய அளவிலான நிமோனியா தடுப்பூசி விரிவாக்கத் திட்டத்தை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கிவைத்தார்.

Mansukh Mandaviya
Mansukh Mandaviya

By

Published : Oct 30, 2021, 3:34 PM IST

நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்தின் கீழ் தேசிய அளவிலான நிமோனியா தடுப்பூசி திட்டத்தை சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா நேற்று (அக்.30) தொடங்கி வைத்தார்.

மக்களிடையே நிமோனியா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தகவல் மற்றும் விழிப்புணர்வு தொகுப்பை அமைச்சர் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது, "அனைவருக்குமான பயன்பாட்டுக்கு நிமோனியா தடுப்பூசி முதல் முறையாக கிடைக்கப் போகிறது.

5 வயதுக்கு கீழான குழந்தைகளின் இறப்புக்கு நிமோனியா முக்கிய காரணமாக உள்ளது. இந்தியாவில், சுமார் 16 சதவீத குழந்தைகளுக்கு நிமோனியா காரணமாக இறப்பு ஏற்படுகிறது. நாடு முழுவதும் நிமோனியா தடுப்பூசி அறிமுகம், குழந்தைகளின் இறப்பை சுமார் 60 சதவீதம் குறைக்கும்.

குழந்தைகள் நாட்டின் எதிர்காலம். அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்குவது நமது பொறுப்பு. நிமோனியா தடுப்பூசி குழந்தைகளின் இறப்பு வீதத்தை குறைப்பதோடு, குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியையும் உறுதி செய்யும்" என்றார்.

இதையும் படிங்க:சமூக நீதிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்கத் தேவர்- பிரதமர் நரேந்திர மோடி!

ABOUT THE AUTHOR

...view details