தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிங்கு எல்லையில் இளைஞர் கொடூரக் கொலை - சிங்கு எல்லையில் கொலை

வேளாண் சட்ட எதிர்ப்புப் போராட்டம் நடைபெறும் சிங்கு எல்லையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வாலிபர் கொடூரக் கொலை
வாலிபர் கொடூரக் கொலை

By

Published : Oct 15, 2021, 12:20 PM IST

Updated : Oct 15, 2021, 12:39 PM IST

டெல்லி-ஹரியானா மாநில எல்லைப் பகுதியான சிங்குவில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்தப் பகுதியில் இன்று காலை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பாரிகேட்டில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்த ஒரு நபரின் உடல் காணப்பட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடலை மீட்டு அருகேயுள்ள அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு சேர்த்துள்ளனர்.

முதற்கட்ட தகவலின்படி உயிரிழந்த நபர் லக்பீர் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த கொலை குறித்து காவல்துறை, தடயவியல் நிபுணர்கள் சம்பவயிடத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்தச் சம்பவத்திற்கு தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனப் போராட்ட குழு தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:2024ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் ராமர் கோயில் திறக்கப்படும்

Last Updated : Oct 15, 2021, 12:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details