டெல்லி: ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்திவருகிறார்.
அந்த வகையில் இன்று 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், "1971 போரில் பாகிஸ்தானை இந்தியா வென்றதன் 50ஆவது ஆண்டு விழா அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் இந்தச் நேரத்தில், ராணுவ வீரர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
டிசம்பரில் கடற்படை தினம் மற்றும் ஆயுதப்படை கொடி தினத்தை கொண்டாடுகிறோம். இந்தச் சந்தர்ப்பத்தில், நமது ஆயுதப் படைகளை, நமது வீரர்களை நான் நினைவு கூர விரும்புகிறேன். குறிப்பாக, இந்த மாவீரர்களைப் பெற்றெடுத்த துணிச்சலான தாய்மார்களை போற்றி வணங்குகிறேன்.
ராணி லக்ஷ்மிபாய் மற்றும் ஜல்காரி பாய் போன்ற சுதந்திர போராட்ட வீராங்கனைகளை ஈன்றெடுத்த பெருமைக்குரிய மண் ஜான்சி மற்றும் பந்தேல்கண்ட். கேல் ரத்னா மேஜர் தயான் சந்த் போன்றோரையும் இந்தப் பகுதிகள் நமக்குப் பரிசாகக் கொடுத்துள்ளன," என்று பேசினார்.