தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'அனைவருக்கும் தடுப்பூசி... அதன்பின் மனதின் குரல்' - ராகுல் தாக்கு!

நாட்டின் தடுப்பூசி திட்டம் மெதுவாக நடைபெறுவதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

By

Published : Jun 27, 2021, 4:36 PM IST

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

நாடு முழுவதும் கோவிட்-19 தடுப்பூசி திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுவரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியின் வேகம் குறித்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

முதலில் தடுப்பூசி, பின் மனதின் குரல்

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி, 'மனதின் குரல்' (மன் கி பாத்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றுவது வழக்கம். அதை விமர்சிக்கும் விதமாக, இன்று(ஜுன்.27) ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், முதலில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துங்கள். அதன்பின்னர், மனதின் குரல் நிகழ்ச்சியை பார்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இதுவரை 31.76 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 26.25 கோடி பேர் முதல் டோசும், 5.50 கோடி பேர் இரண்டு டோஸ்களும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

நாட்டின் மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களில் ஐந்து விழுக்காட்டினருக்கு மட்டுமே இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'நான் தமிழ் மொழியின் அபிமானி' - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details