டெல்லி:மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை, 8 மணி நேர விசாரணைக்குப் பின் சிபிஐ கைது செய்தது. இதைத் தொடர்ந்து அவரை 5 நாட்கள் காவலில் விசாரிக்க, நேற்று (பிப்.27) டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி, மணீஷ் சிசோடியா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், "இந்த விவகாரத்தில் நாங்கள் முதலில் தலையிட விரும்பவில்லை. மனுதாரர் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகலாம். உங்கள் தரப்பு வாதங்களை அங்கு தெரிவிக்கலாம்" என உத்தரவிட்டனர்.