இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், துப்புல் ரயில் நிலையம் அருகே நேற்று (ஜூன் 30) ஏற்பட்ட நிலச்சரிவில் ராணுவ வீரர்கள் உள்பட 80க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து போலீசார் மாநில பேரிடர் மீட்பு குழுவினருடன் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இன்றைய நிலவரப்படி 14 பேருடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 60-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.