உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மார்ச் 10) எண்ணப்பட்டு வருகின்றன.
60 தொகுதிகள் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்கு கடந்த பிப்.28, மார்ச் 5ஆம் தேதி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 2002ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது.
2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், தற்போது நடைபெற்று முடிந்த மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மணிப்பூரில் 25 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 11 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தேசிய மக்கள் கட்சி 13 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.