சுற்றுலாப் பயணிகளின் பிரபல மலையேற்றப் பகுதியில் மளமளவென பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் பொருட்டு, தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தைச் சேர்ந்த 60 வீரர்கள் அடங்கிய ஏழு மீட்புக் குழுவினர் அப்பகுதிக்கு விரைந்தனர்.
அத்துடன், இந்திய விமானப் படையின் எம்ஐ-17 வி5, சி-130ஜே விமானங்கள் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
மேலும், அங்குள்ள கள நிலவரம் தொடர்பாக மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங்கை தொடர்பு கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விசாரித்தார்.
இந்நிலையில், இந்த காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மணிப்பூரின் சேனாபதி மாவட்ட துணை ஆணையர் கிரன் குமார் தெரிவித்துள்ளார். இந்த மாபெரும் பணியில் ஈடுபட்ட பேரிடர் மீட்பு படை மற்றும் பாதுகாப்பு படையினருக்கு மாநில அரசு நன்றி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:சிமென்ட் தொழிற்சாலைகள் சுயலாபத்திற்காக சந்தையை துஷ்பிரயோகம் செய்கின்றன - நிதின் கட்கரி