தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

செல்போன் அழைப்பை ஏற்காததால் பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞர் கைது! - செல்ஃபோன் அழைப்பை ஏற்காததால் ஆத்திரம்

செல்போன் அழைப்பை ஏற்காததால் பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

phone
phone

By

Published : Jul 21, 2022, 7:01 PM IST

நெல்லூர்:ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ரெபாலா கிராமத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், வெங்கட் என்ற இளைஞருடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்தாக தெரிகிறது. அண்மைக்காலமாக வெங்கட்டுடன் அந்த பெண்மணி பேசாமல் இருந்துள்ளார்.

செல்போனில் தொடர்பு கொண்டபோதும், அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதையடுத்து, வெங்கட் தனது நண்பர் ரவியுடன், அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று வாக்குவாதம் செய்துள்ளார்.

அப்போது, ஆத்திரமடைந்த வெங்கட் பிளேடால் அந்த பெண்ணின் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்ப முயன்ற அவரை, அப்பகுதி மக்கள் பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்தனர்.

போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், வெங்கட் மற்றும் அவரது நண்பரையும் கைது செய்தனர்.

இதையும் படிங்க:மனைவி மீது சந்தேகம் - 'ஷூ லேசால்' கழுத்தை இறுக்கிக்கொலை!

ABOUT THE AUTHOR

...view details