ராஜஸ்தாஸ் மாநிலம், ஜெய்சல்மாரில் உள்ள பூனம் நகர் கிராமத்தில் வசித்த பிரபல பாடகர் தலாப் கானுக்கு திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக ஜெய்சால்மர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு ஏற்கனவே படுக்கைகள் நிரம்பி இருந்ததால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அவர் சக்கர நாற்காலியிலேயே காத்திருக்க வைக்கப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டார்.
ஆக்ஸிஜனுக்காக சக்கர நாற்காலியில் காத்திருந்த பிரபல பாடகர் உயிரிழப்பு - பாடகர் தலாப் கான்
ஜெய்ப்பூர்: ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக பிரபல மாங்கனியார் இசைக் குழுவின் பாடகர் தலாப் கான் உயிரிழந்தார்.
பிரபல பாடகர் உயிரிழப்பு
இதனிடையே, அவருக்கு ஆக்ஸிஜன் அளவு கணிசமாக குறைந்ததை அடுத்து சுவாசிப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவருக்கு படுக்கை ஏற்பாடு செய்து சிகிச்சை அளிப்பதற்கு முன்னரே சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே பரிதாபமாக உயிரிழந்தார். சிகிச்சைக்காகக் காத்திருந்த தலாப் கானின் புகைப்படம், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.