மங்களூரு: மங்களூருவில் கரோடி அருகே சனிக்கிழமை(நவ-19 ) சென்ற ஆட்டோ வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்ட ஷாரிக்கிற்கு சர்வதேச பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை கர்நாடக ஏடிஜிபி அலோக் குமார் உறுதிபடுத்தியுள்ளார்.
மங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த ஏடிஜிபி அலோக் குமார் கூறுகையில், ‘குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட ஷாரிக் தற்போது பேசும் நிலையில் இல்லை. அவரது குடும்பத்தினர் அவரை அடையாளம் கண்டு உறுதி செய்துள்ளனர்.
மேலும் ஷாரிக் மீது ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளன. மங்களூரு, மைசூர், ஷிவ்முகா ஆகிய நகரங்களைத் தாக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்த ஷாரிக் முன்னதாக ஷிவ்முகாவில் நடந்த கலவரத்தில் சம்பந்தப்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது. தற்போது என்ஐஏ அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்’ என ஏடிஜிபி தெரிவித்தார்.