மங்களூரு(கர்நாடகா):இந்தியா மற்றும் பல நாடுகளில் பணி புரியும் காவல் துறையினரின் சீருடை காக்கி நிறமாகும். இந்த காக்கி துணி எப்படி உருவானது என்பது குறித்து நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியாமல்தான் உள்ளது. மேலும் சமீபத்தில் பிரதமர் மோடி நாட்டில் உள்ள மாநிங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறையினரின் சீருடை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மேலும் 'ஒரே நாடு-ஒரே சீருடை' கொள்கை அமலுக்கு வரும் எனவும் பிரதமர் மோடி முன்மொழிந்துள்ளார்.
இதன் அடிப்படையில் காக்கி துணி உருவான இடம் குறித்த சுவாரஸ்யத் தகவல் வெளியாகி உள்ளது. இயல்பாகவே காக்கி நிறத்திற்கு (வெளிர் மஞ்சள்-பழுப்பு நிறம்) அனைத்து இடங்களிலும் மரியாதை இருப்பது உண்மையாகும். காவல் துறையைத் தவிர, பல்வேறு அரசுத் துறைகளிலும் காக்கி நிற சீருடைகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய காக்கித் துணி முதன்முதலில் கர்நாடகா மாநிலம், மங்களூரில் உருவானது. இந்த நிறத்தை மங்களூரு தான் உலகிற்கே அறிமுகம் செய்தது.
காக்கி துணியின் வரலாறு:காக்கி துணி முதன் முதலில் கர்நாடகாவில் கடலோரத்தில் அமைந்து உள்ள மங்களூரில் தான் தயாரானது. அங்குள்ள பால்மாதாவில் உள்ள நெசவுத் தொழிற்சாலையில் முதன்முதலில் உற்பத்தி செய்யப்பட்டது. 1834 இல், பாஷேல் என்ற மிஷனரி அமைப்பு மங்களூருக்கு வந்தது. இந்த அமைப்பு 1844ஆம் ஆண்டு பால்மாதாவில் ஒரு நெசவுத் தொழிற்சாலையைத் தொடங்கியது.