இந்தாண்டு விளையாடிய 9 ஆட்டங்களில் ஸ்மிருதி மந்தனா ஒரு சதம் உட்பட 411 ரன்கள் குவித்து , பேட்ஸ்மேன் தரவரிசையில் 8வது இடத்தை தக்க வைத்து கொண்டார். உலக கோப்பை தொடரில் கலக்கிய ஆஸ்திரேலியாவின் அலிசா ஹெய்லி முதலிடத்திலும் மற்றும் இங்கிலாந்தின் நடாலி ஸ்கிவர் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் சோஃபி எக்லெஸ்டோன் முதலிடத்திலும் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஜென் ஜோனாசென் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். நடப்பு ஆண்டில் ஜூலான் கோஸ்வாமி 12 விக்கெட்களை வீழ்த்தியுள்ள போதிலும் , அவர் ஒரு இடம் சறுக்கி 6ஆவது இடத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்காவின் அயபோங்க காக்கா 5வது இடத்தை பிடித்துள்ளார்.