தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் நேற்று (அக். 10) நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு நடிகர் பிரகாஷ்ராஜும் நடிகர் விஷ்ணு மஞ்சுவும் போட்டியிட்டனர்.
பிரகாஷ்ராஜ் இந்தத் தேர்தலில் போட்டியிட்டதை சங்கத்தில் இருந்த பலரும் விரும்பவில்லை. பிரகாஷ்ராஜ் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால் பலரும் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். சிலர் நேரடியாகவே இது குறித்து விமர்சிக்கவும் செய்தனர்.
பிரகாஷ்ராஜ் அடிப்படையில் கன்னடர் என்றாலும் அவர் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளதையடுத்து பல முன்னணி நடிகர்களுடன் நட்பு பாராட்டிவருகின்றார். இவர் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாகார்ஜுனா, சிரஞ்சீவி, பவன் கல்யாண் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்தனர்.
வெற்றிப்பெற்ற விஷ்ணு மஞ்சு இந்நிலையில் நேற்று (அக். 10) மாலை தேர்தல் முடிவடைந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பிரகாஷ்ராஜ் அணி தோல்வியைத் தழுவியது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகர் விஷ்ணு மஞ்சு வெற்றிபெற்றார். இவர் இந்தப் பதவியில் இரண்டுகள் தொடருவார்.
தெலுங்கு திரைப்பட நடிகர் சங்கத்தில் (MAA) உறுப்பினராக 925 பேர் உள்ளனர். அவர்களில் 883-க்கும் மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டையை வைத்துள்ளனர். நேற்று நடைபெற்ற தேர்தலில் முதல் முறையாக 600 வாக்குகள் பதிவாகின.
பெரிய நடிகர்களின் ஆதரவு பிரகாஷ்ராஜுக்கு இருந்தும் அவர் தோல்வியைத் தழுவியது தெலுங்கு திரைப்பட வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஷ்ணு மஞ்சு ரஜனியின் நண்பரும் நடிகருமான மோகன்பாபுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மகனுக்காக மனைவியை மீண்டும் மணம் முடித்த பிரகாஷ் ராஜ்