மும்பை: மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டம் நெக்நூர் பகுதியில் கடந்த 13ஆம் தேதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
காவல் துறையினரின் தகவலின்படி, நவம்பர் 13ஆம் தேதி பெண் ஒருவர் ஆசிட் காயங்களுடனும், பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த தகவல் கிடைத்ததையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அவர் ஒரு நபரால் ஆசிட் வீசி தாக்கப்பட்டதுடன், உயிருடன் இருக்கும்போதே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.