ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த அமலிங்கப்பா என்பவர் தனது மனைவி லட்சுமிதேவம்மா உடன் பெங்களூருவில் உள்ள ஹொங்கசந்திராவில் வசித்துவந்தார்.
அதைத்தொடர்ந்து, லட்சுமிதேவம்மாவின் தாயார் 2012ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி அமலிங்கப்பா வீட்டிற்குச் சென்றார். அங்கு அவர் தனது மகளை சில நாள்களுக்கு சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லவிருப்பதாக அமலிங்கப்பாவிடம் தெரிவித்தார்.
ஆனால் அமலிங்கப்பா அதற்கு மறுப்புத் தெரிவித்தார். அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த அமலிங்கப்பா, லட்சுமிதேவம்மாவை கத்தியால் தாக்கினார்.
அதில் லட்சுமிதேவம்மா உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
இதையும் படிங்க:வேலூரில் ஆயுள் தண்டனை கைதி சர்க்கரை நோயால் உயிரிழப்பு