பலோட்:சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தில் ரங்கத்தேரா கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன், காலைக்கடனை கழிப்பதற்காக தண்டவாளத்தில் அமர்ந்துள்ளார். அப்போது, இயர் போன்களை மாட்டிக் கொண்டு, ஃபிரீ ஃபயர் கேம் விடையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அந்த நேரத்தில் ரயில் வந்துள்ளது. இயர் போன்களை மாட்டியிருந்ததால், ரயில் வந்ததை மாணவன் கவனிக்கவில்லை. இதனால், ரயில் மோதி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
தண்டவாளத்தில் அமர்ந்து ஃபிரீ ஃபயர் கேம்... பறிபோன மாணவன் உயிர்...
தண்டவாளத்தில் அமர்ந்து ஃபிரீ ஃபயர் கேம் விளையாடிய 12ஆம் வகுப்பு மாணவன், ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காதுகளில் இயர் போன்களை மாட்டியிருந்ததால் ரயில் வந்ததை கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பலோட் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜிதேந்திர குமார் யாதவ் கூறுகையில், "குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு உளவியல் ரீதியாக அடிமையாவதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதுபோல ஆன்லைன் விளையாட்டுகளில் குழந்தைகள் மூழ்கிவிடாமல் இருக்க, வெளியே சென்று விளையாடுவதை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். ஆன்லைன் விளையாட்டுகளுக்காக குழந்தைகள் வீடுகளில் திருடும் சம்பவங்களும் நடக்கின்றன. அதனால் பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: நடுரோட்டில் காதலியை இரும்புக் கம்பியால் தலையில் அடித்து கொலை செய்த காதலன்...