நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவிவகித்துவருபவர் அஜித் தோவல். டெல்லியில் உள்ள இவரது இல்லத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நுழைய முயற்சி செய்த சம்பவம் இன்று காலை அரங்கேறியுள்ளது.
அவரை தடுத்து நிறுத்திய வீட்டின் பாதுகாவலர், அவரை டெல்லி சிறப்பு பிரிவு காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில் அந்நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.