ஜெய்ப்பூர்:பிகானேர் மாவட்டத்தில் வசிப்பவர், ஜவர்லால் மேக்வால் (36). இவர் மாநில அரசாங்கத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கீதா தேவி என்பவருடன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. ஜெய்ப்பூரில் மாநில அரசாங்கத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணி புரிபவர்களுக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் பணி நிரந்தரம் செய்யப்படாது என்று பணியாளர் கட்டாய ஓய்வு பாலிசியில் உள்ளது.
இந்நிலையில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து நிரந்தரப் பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் ஜவர்லால் மேக்வாலுக்கு 3-வது குழந்தை பிறந்து 5 மாதங்களே ஆன நிலையில், இரண்டு குழந்தை பாலிசி கொள்கையால் எங்கு தனக்கு நிரந்தரப்பணி கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார்.
ஆகையால், தனது மனைவியுடன் சேர்ந்து பிறந்து 5 மாதங்களே ஆன மூன்றாவது பெண் குழந்தையை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டுள்ளனர். பின்னர் ஞாயிற்றுக்கிழமை மாலையில் சத்தர்கர் காவல் நிலையம் அருகே உள்ள கால்வாயில் கொலை செய்து வீசியுள்ளனர்.