ஜார்கண்ட்: ஹசாரிபாக் மாவட்டத்தில் வசித்து வந்தவர் ராஜேஷ் சோன்கார். இவருக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வந்தனா தேவி(27) என்பவருக்கும் திருமணமாகி 15 நாள்களுக்கு முன் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், குழந்தை பிறந்த முதலே இவர் தனது மனைவியை சந்தேகப்பட்டதால் இவருக்கும் இவரது மனைவிக்கும் வாக்குவாதங்களும் சண்டைகளும் நிகழ்ந்துள்ளன.
இந்த நிலையில் சம்பவத்தன்று, வாக்குவாதம் முற்றியதில் தனது மனைவியை சுட்டுக் கொன்று விட்டு பிறந்து 15 நாள்கள் ஆன குழந்தையுடன் விட்டை பூட்டி விட்டு தப்பியோடியுள்ளார். குழந்தையின் அழுகுரல் கேட்ட வந்தனாவின் மைத்துனர் கதவை உடைத்து உள்ளே வந்து பார்க்கும் போது ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக வந்தனா இறந்து கிடந்துள்ளார்.