தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜார்கண்டில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்புணர்வு - பெண் பாலியல் வன்புணர்வு

ஜார்கண்ட்: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஜார்கண்டில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்புணர்வு
ஜார்கண்டில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்புணர்வு

By

Published : Mar 27, 2021, 8:02 PM IST

ஜார்கண்ட் மாநிலம் லேட்கர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அடையாளம் தெரியாத நபர் பாலியல் வன்புணர்வுசெய்துள்ளார்.

இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நபர் ஒருவர், அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதேபோல் ஐந்து ஆண்டுக்கு முன் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கர்ப்பமானார். அந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை இதுவரை காவல் துறையினர் கைதுசெய்யவில்லை எனத் தெரிகிறது.

தற்போது பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: ஓடும் ரயிலில் காவலரால் வெளிநாட்டு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

ABOUT THE AUTHOR

...view details