மும்பை:மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் பகுதியில் உடல் உறவுக்கு மறுத்த மனைவியை கணவனே கொலை செய்து உடலை எரித்த சம்பவம் நடந்துள்ளது. சந்திராபூர் பகுதியில் உள்ள வயல்வெளியில் பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கிடப்பதாக அப்பகுதி போலீசாருக்கு ஜனவரி 6ஆம் தேதி தகவல் கிடைத்துள்ளது.
இந்த உடலை கைப்பற்றிய போலீசார் நடத்திய விசாரணையில், அது யவத்மால் பகுதியில் வசித்துவரும் சஞ்சய் சக்ரே என்பவரது மனைவி மாயா பாய் சக்ரேவின் உடையது என்பது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் சஞ்சய் சக்ரேவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. அதாவது, ஜனவரி 5ஆம் தேதி இரவு சஞ்சய் சக்ரே மனைவி மாயாவை உடலுறவுக்கு அழைத்துள்ளார்.